மாப்பிள்ளையின் நண்பர்கள் செய்த அதிர்ச்சி செயல் | மணப்பெண் சொன்ன வார்த்தை

x

மணப்பெண்ணை நடனமாட அழைத்த சம்பவம் - பாதியில் நின்ற திருமணம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் நடனாமாடுமாறு கூறியதால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் அரங்கேறியுள்ளது. காந்திகுப்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும், பனகமுட்லுவை சேர்ந்த இளைஞருக்கும் காவேரிப்பட்டிணம்-சேலம் சாலையில் உள்ள மண்டபத்தில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மாப்பிள்ளையின் நண்பர்கள் மது போதையில் வந்து மணப்பெண்ணை நடனமாடச் சொன்னதால், அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, மணமகனுடன் வந்த சிலர் பெண் வீட்டாரை தாக்கியதாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண், "திருமணம் வேண்டாம்" என்று கூறி திருமணத்தை நிறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்