Strike | தமிழகத்தில் திடீர் `ஸ்ட்ரைக்’ அறிவிப்பால் ஷாக்
தமிழகத்தில் திடீர் `ஸ்ட்ரைக்’ அறிவிப்பால் ஷாக்
#tnstrike #cartonbox #gst
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அட்டைப்பெட்டிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அம்பத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மூலப்பொருட்களின் விலை 25 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், ஜி.எஸ்.டி. வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினர். மறுசுழற்சிக்காக இறக்குமதி செய்யப்படும் காகிதத்துக்கான 10 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டு காகித ஏற்றுமதியை தடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
