கிரிவலப்பாதையில் அதிர்ச்சி - பதறிய பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் கிரிவலப்பாதையில் மது போதையில் இருந்த நபர், பக்தர்களை மிரட்டுவது போல பாவனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த காவலர்கள், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். கோயில் வளாகத்தில் இது போன்று மது போதையில் உலாவும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
