Tambaram | மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில் அதிர்ச்சி - திக்குமுக்காடும் மக்கள்
மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில் அதிர்ச்சி - திக்குமுக்காடும் மக்கள்
Tambaram | மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில் அதிர்ச்சி - திக்குமுக்காடும் மக்கள்
தாம்பரத்தில் சாலை பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதித்தது. தாம்பரம்–வேளச்சேரி பிரதான சாலையான மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலை குறுகியதால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாரத மாதா சாலையில் இருந்து மணல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் பள்ளத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் வாகனம் அப்புறப்படுத்தப்பட்டு பள்ளத்தை மூடும் பணிகள் நடைபெற்றன. பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
