ஓடும் ரயிலில் அதிர்ச்சி - 2 இளைஞர்கள் செய்த செயல்.. அலறிய பெண் பயணி
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த அஞ்சலை என்பவர் ரயிலில் திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தப்பி ஓடிய நபர்கள் குறித்து சி.சி.டி.வி உதவியுடன் போலீசார் தேடினர். இதில் மாரியப்பன், கார்த்திக் ஆகிய இருவரும் செயிம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
