Dharapuram Byelection| இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதியில் அதிர்ச்சி - பொதுமக்கள் அதிருப்தி

இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரம் தொகுதியில் அதிர்ச்சி - பொதுமக்கள் அதிருப்தி

தாராபுரத்தில் தேர்தல் விதிகள் அமலாகியும் அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையிலும், அரசியல் போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையம், தாலுகா அலுவலகச் சாலை மற்றும் முக்கியக் கடைவீதிகளில் உள்ள போஸ்டர்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

#tnbyelection #dharpuram #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com