கர்ப்பிணிக்கு கொடுக்கப்பட்ட குளுக்கோஸில் அதிர்ச்சி
கர்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கியதால் சர்ச்சை
திருப்பூர் மாநகராட்சியில் காலாவதியான குளுக்கோஸ் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த ஐந்து மாத கர்ப்பிணி பானுமதி மருத்துவ பரிசோதனைக்காக அவிநாசி சாலையில் உள்ள தாய் சேய் நல மையத்திற்கு சென்றபோது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குளுக்கோஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட குளுக்கோஸ் காலாவதி ஆகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பானுமதி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார நல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி, காலாவதியான பத்துக்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
