Chennai | சென்னையில் லீசுக்கு வீடு தேடியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி

சென்னையில் லீசுக்கு வீடு தேடியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி

#chennai | #leasehouse சென்னையில் லீசுக்கு வீடு தேடியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சென்னை பெரவள்ளூரில், வீட்டை லீசுக்கு விடுவதாகக் கூறி இளைஞரிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த விவேக்கிடம், 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வீட்டை லீசுக்கு விடுவதாகக் கூறிய உரிமையாளர், அதே வீட்டை வேறொருவருக்கு அதிக தொகைக்கு லீசுக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. வாங்கிய தொகையில் 4 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்த நிலையில், மீதமுள்ள தொகையைக் கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, விவேக் அளித்த புகாரின் பேரில் நிர்மலாவைக் கைது செய்த போலீசார், தலைமறைவான அவரது கணவரைத் தேடி வருகின்றனர்.

X