Tenkasi | Crime | பள்ளி தோழியை அழைத்து சென்ற நண்பருக்கு அதிர்ச்சி | பெட்ரோல் ஊற்றி எரித்த கும்பல்
Tenkasi | Crime | TN Police | பள்ளி தோழியை அழைத்து சென்ற நண்பருக்கு அதிர்ச்சி | காரைப் பெட்ரோல் ஊற்றி எரித்த கும்பல் #tenkasi #crime #TNpolice #thanthitv பள்ளி தோழியை அழைத்து சென்ற நண்பரின் கார் எரிப்பு - 3 பேர் கைது தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே, பள்ளித் தோழியை காரில் அழைத்துச் சென்ற நண்பரைத் தாக்கி, அவரது காரை எரித்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மங்களாபுரம் கோவில் திருவிழாவிற்கு வந்த சின்னத்துரை என்பவர், தனது தோழியுடன் காரில் சென்றதை ஒரு கும்பல் வழிமறித்துக் கண்டித்துள்ளது. வாக்குவாதம் முற்றவே, சின்னத்துரையைத் தாக்கிய அக்கும்பல், அவர் வந்த பொலிரோ காரைப் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது.. இது குறித்துப் புகாரின் பேரில், பால்துரை, சீனு குமார், கற்பக ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 20 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
