குடும்பத்தோடு காரில் சென்றவருக்கு காத்திருந்த ஷாக்... சேலம்-கோவை NHல் பேரதிர்ச்சி

குடும்பத்தோடு காரில் சென்றவருக்கு காத்திருந்த ஷாக்... சேலம்-கோவை NHல் பேரதிர்ச்சி

#coimbatore | #car | #fireaccident குடும்பத்தோடு காரில் சென்றவருக்கு காத்திருந்த ஷாக்... சேலம்-கோவை NHல் பேரதிர்ச்சி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நெய்க்காரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சேலம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சேலம் நோக்கி காரில் சென்றபோது, திடீரென எஞ்சின் சூடாகி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காரில் இருந்த மூவரும் உடனடியாக வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com