கடலில் மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி வலையில் சிக்கிய விஷப்பாம்புகள்
சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் மனோஜ்குமார் காலை வழக்கம்போல் இறால் பிடிக்க நடுக்கடலில் வலை வீசினார். ஆனால் எதிர்பாராதவிதமாக வலையில், இறால், நண்டுகளுடன் 8 கடல் விஷப்பாம்புகள் உயிருடன் நெளிந்து கொண்டிருந்தன. துரிதமாக செயல்பட்ட மனோஜ், கட்டை மூலம் 8 விஷப்பாம்புகளையும் மீண்டும் கடலில் வீசி எறிந்துவிட்டு பாதுகாப்பாக கரை திரும்பினார். கடல் விஷப்பாம்பு கடித்தால் உடலில் வீக்கம், ரத்தம் உறைதல், மாரடைப்பு வரை ஏற்படலாம் எனவும், உடனடி சிகிச்சை அவசியம்" என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story
