Dindugal | இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வந்த இடத்தில் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேத்துப்பாறை பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்தினருக்கு தனியே இடுகாடு இல்லாத நிலையில், கடந்த 50 ஆண்டு காலமாக அங்கிருக்கும் அரசு நிலத்தையே இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கிராமவாசி ஒருவர் உயிரிழந்ததால், உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது இடுகாட்டின் அருகில் இருக்கும் குடும்பத்தினர், உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தகராறில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கிராமத்தினர், இந்த இடத்தை அளவீடு செய்து, இடுகாடு அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
