விபத்தை தவிர்க்க முயன்ற பேருந்து - பேக்கரிக்குள் புகுந்ததால் அதிர்ச்சி
விபத்தை தவிர்க்க முயன்ற பேருந்து - பேக்கரிக்குள் புகுந்ததால் அதிர்ச்சி
Summary
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்தின் மீது மோதுவதை தவிர்க்க முயன்ற அரசு பேருந்து, சாலையோர பேக்கரிக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிவேலம்பட்யில், பள்ளி மாணவர்களுடன் வந்த தனியார் வாகனம் சாலையை கடக்க முயன்றது. அப்பொழுது கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்த அரசு பேருந்து, பள்ளி வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்து பேக்கிரிக்குள் புகுந்தது. அதிஷ்டவசமாக பேக்கரி வாடிக்கையாளர்கள் மற்றும் பயணிகள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
பேருந்து பேக்கிரிக்குள் புகுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
