அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரம்: மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலருக்கு நோட்டீஸ்

மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை கழக தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரம்: மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலருக்கு நோட்டீஸ்
Published on

அயல் நாடுகளுக்கு பாறாங்கற்களை ஏற்றுமதி செய்ய தூத்துக்குடி வ.உ சி. துறைமுகம் வழியாக கொண்டு செல்வதற்கான கட்டணம் வசூலிப்பதில் வருடத்திற்கு 3 புள்ளி 39 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், என்.சதிஷ் குமார் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அரசுக்கு, அதிகாரிகள் வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com