Shilpa Shetty | சாமியாருக்காக கணவர் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் உறைந்த ஷில்பா ஷெட்டி

x

சாமியாருக்கு சிறுநீரகம் தானம் - ஷில்பா ஷெட்டி கணவர் முடிவு

சிறுநீரகம் செயலிழந்த சாமியாருக்கு சிறுநீரகம் தானம் செய்ய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா முன்வந்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த சாமியார் பிரேமானந்த் மகாராஜ், 10 ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்து பாதிக்கப்பட்டு வருகிறார். அவரது சொற்பொழிவால் ஈர்க்கப்பட்ட ராஜ் குந்தரா, தனது சிறுநீரகத்தை அவருக்கு தானமாக வழங்க முன்வந்தார். இதற்காக நன்றி தெரிவித்த சாமியார், ராஜ் குந்த்ராவின் சிறுநீரகத்தை ஏற்க மறுத்துவிட்டார். ஏற்கெனவே ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது பணமோசடி பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சாமியாருக்கு அவர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்