Sharon PLY | மர சிற்பக் கலைஞர்களை கவுரவித்த Sharon பிளை

மர சிற்பக் கலைஞர்களை கவுரவித்த Sharon பிளை

#SharonPLY | #chennai சென்னையில் சிறந்த மர சிற்பக் கலைஞர்கள் 5 பேருக்கு, Sharon பிளை நிறுவனத்தின் "I Am Strongest" விருது வழங்கப்பட்டது. அப்பர் லட்சுமணன், ரங்காச்சாரி ஸ்தபதி, மாசானம் ஆச்சாரி, திருநாவுக்கரசு ஸ்தபதி, குமாரசாமி ஸ்தபதி ஆகிய 5 பேருக்கு நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு கெமானி விருதுகளை வழங்கினார். ஏழாவது ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விருது பெற்ற 5 பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மர சிற்பக் கலைஞர்களை கௌரவிப்பதில் நிறுவனம் பெருமை கொள்வதாகவும், தொடர்ந்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்றும் நிறுவனத்தின் பொது மேலாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com