"கருணாநிதி எழுத்துகளில் சண்முகநாதன் வாழ்வார்" - கி.வீரமணி, வைரமுத்து உருக்கம்

'கலைஞர் எழுத்துகளில் சண்முகநாதன் வாழ்ந்து கொண்டே இருப்பார்", "சண்முகநாதன் மறையவில்லை" என்று கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற கி.வீரமணி, வைரமுத்து உருக்கம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் பணியாற்றிய சண்முக நாதன் உடல் நலக் குறைவால் காலமானார். கேஎன் நேரு, டிஆர் பாலு, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, பொன்முடி, செந்தில் பாலாஜி, ரகுபதி , சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா மற்றும் தொழிலதிபர் ஸ்ரீனிவாசன், கவிஞர் வைரமுத்து, சு.ப.வீரபாண்டியன், கி.வீரமணி, துர்கா ஸ்டாலின், சபரீசன், பீட்டர் அல்போன்ஸ், விஜி.ராஜேந்திரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் சண்முக நாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சண்முகநாதனின் இறுதிச் சடங்கு சொக்கநாதன் காலனியில் இருந்து தொடங்க உள்ளது. மயிலாப்பூர் மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com