வசதி இல்லாதவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் சங்கரன் - இயக்குநர் சற்குணம்

வசதி இல்லாதவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் சங்கரன் என இயக்குநர் சற்குணம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வசதி இல்லாதவர்களுக்கு இலவச கல்வி வழங்கியவர் சங்கரன் - இயக்குநர் சற்குணம்
Published on
தமிழகத்தில் முதல் முதலாக தொடங்கப்பட்ட அகாடமி சங்கர் ஐஏஎஸ் அகாடமி. இங்கு படித்த பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக உருவாகியுள்ளனர். இந்த அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினையே தற்கொலைக்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து சங்கரின் இல்லத்திற்கு சென்ற மயிலாப்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ராயப்பேட்டை மருத்துவமனையில் சங்கரின் உடலை பார்த்த பிறகு பேசிய இயக்குநர் சற்குணம், அவரது தற்கொலை பேரதிர்ச்சியாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com