"ஷாலினி எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளார்.." மனம் திறந்த அஜித் குமார்!
இந்த நேரத்துல ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளிச்ச அஜித்குமார், தன்னோட மிகப்பெரிய பலமே குடும்பம்தான்நு சொன்னாரு.
பிரபலமான நடிகையாக இருந்த ஷாலினி, தனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செஞ்சிருப்பதாவும், கடினமான நேரத்துல உறுதுணையாக இருந்திருப்பதாவும் அஜித் நெகிழ்ந்திருக்காரு.
தன்னுடைய சாதனைகள் எல்லாம் மனைவி ஷாலினியையே சேரும்நு புகழ்ந்திருக்க அஜித், எல்லா நேரத்திலும் ரசிகர்களின் அளவற்ற அன்பு தன்னோடு இருப்பதாக மனம் திறந்திருக்காரு.
தனக்கு அடைமொழிகளில் எந்த நம்பிக்கையும் இல்லைனும், அஜித் அல்லது ஏ.கே என்று கூப்டுறதையே விரும்புவதாகவும் தெரிவிச்சிருக்காரு.
மற்ற பணிகள்போல் நடிப்பதும் ஒரு வேலை என்பதால், அதற்கு சம்பளம் வாங்கிட்டு இருப்பதாகவும், புகழ், பணம் எல்லாம் வேலையின் ஒரு பகுதிதானும் சிம்பிளா சொல்லிட்டாரு.
நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதற்கு நண்பர்கள்தான் காரணம்னு சொன்ன AK,
வாழ்க்கையை எளிமையா வாழ விரும்புவதா கூலா முடிச்சாரு.
தொடர்ந்து, பத்மபூஷன் விருதோட சென்னை வந்த அஜித், எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதால் விரைவில் நேரில் சந்திப்பதாக பேட்டி கொடுத்தாரு.
ரொம்ப நாள் கழிச்சி ஏ.கே. பேட்டி கொடுக்கப்போறதை ஃபேன்ஸ் ஆவலோட காத்திருக்காங்க..
