சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- விசாரணைக்கு அஞ்சி கூலித் தொழிலாளி தற்கொலை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- விசாரணைக்கு அஞ்சி கூலித் தொழிலாளி தற்கொலை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட கூலித் தொழிலாளி, போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். விவசாயக் கூலி வேலை செய்து வந்த அந்த நபர், தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த சின்னன், தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story