மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -சிக்கிய அரசு கல்லூரியின் முக்கிய புள்ளி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில், அரசு ஆயுர்வேத கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கல்லூரியின் ஆய்வக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோயிலில் செயல்பட்டு வரும் அரசு ஆயுர்வேத கல்லூரியில், அங்கு பணிபுரிந்து வரும் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உறைவிட மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிகள் இரண்டு பேர், கல்லூரியில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர் வைரவன் என்பவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆன்லைன் மூலம் போலீசில் புகாரளித்துள்ளனர். இதன் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆய்வக உதவியாளர் வைரவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com