IIT Madras | மாணவிக்கு பாலியல் தொல்லை - சென்னையை உலுக்கிய சம்பவத்தில் ஐஐடி விளக்கம்

x

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து ஐஐடி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்கு வந்திருந்த வேறு ஒரு கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவியிடம், உணவகத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் அத்துமீறினார். இது குறித்து மாணவி அளித்த புகாரில் அந்த நபரை ஐஐடி செக்யூரிட்டி காவலர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது போன்ற சம்பவங்கள் துரதிஷ்டவசமானது, வளாகத்தில் பாலியல் குற்றங்களை ஐஐடி நிர்வாகம் ஒரு போதும் பொறுத்துக்கொள்ளாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான வளாகத்தை வழங்க உறுதியேற்றுள்ளோம் என ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்