21 வயது பெண்ணுக்கு பாலியல் சீண்டல் சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
21 வயது பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.. கடந்த மாதம்15ஆம் தேதி ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வைத்து தன்னிடம் மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடிவிட்டதாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். கார்த்திக் மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
Next Story
