குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; மூன்று பள்ளிகளுக்கு விரைவில் சம்மன் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்தபடி இருப்பதாகவும், இது தொடர்பாக சென்னையில் உள்ள மேலும் மூன்று பள்ளிகளுக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; மூன்று பள்ளிகளுக்கு விரைவில் சம்மன் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
Published on

பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்தபடி இருப்பதாகவும், இது தொடர்பாக சென்னையில் உள்ள மேலும் மூன்று பள்ளிகளுக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகாரைத்தொடர்ந்து, பல பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மீது புகார்கள் வந்தபடி உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னையில், ஏற்கனவே 3 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக விரைவில் அந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தினருக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

18 வயதிற்கு உட்பட்ட பாதிக்கப்படும் மாணவிகள் , சிறுமிகள், மின்னஞ்சலில் புகார்களை அனுப்பலாம் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com