பாலியல் வன்முறை : "கல்வித்துறை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்" - மாநில தகவல் ஆணையம் உத்தரவு

பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்த தகவல்களை அளிக்க முருகேஷ் என்பவர் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பாலியல் வன்முறை : "கல்வித்துறை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்" - மாநில தகவல் ஆணையம் உத்தரவு
Published on

பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்த தகவல்களை அளிக்க முருகேஷ் என்பவர் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளிக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இதனடிப்படையில், உத்தரவிட்டுள்ள ஆணையம், பதிவான வழக்குகள், அதன் தற்போதைய நிலை ஆகிய விவரங்களுடன், வரும் 13 ஆம் தேதி கல்வித்துறை அதிகாரி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 2000 ஆம் ஆண்டு முதல், 2019 ஆம் ஆண்டு வரை உள்ள விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com