Salem Crime | மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர்களின் குரூர செயல்.. சேலத்தில் அதிர்ச்சி
#Salem | #OldLady | #Abuse | #TNPolice | #ThanthiTV Salem Old Lady Abuse | மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - இளைஞர்களின் குரூர செயல்.. சேலத்தில் அதிர்ச்சி சேலம் கன்னங்குறிச்சி அருகே 66 வயது மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டீக்கடைக்கு சென்ற மூதாட்டியிடம் கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. மூதாட்டி சத்தம் போட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்மீது ஏற்கனவே 2024ஆம் ஆண்டு வேறொரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
