மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - விழுப்புரத்தில் அதிர்ச்சி
விழுப்புரம், மேல்மலையனூர் அருகே தனியாக வசித்து வந்த மாற்றுத் திறனாளி மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள சங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளி மூதாட்டி. தனியாக வசித்து வரும் இவரது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதில் மூதாட்டிக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த மேல்மலையனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
