12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

முதியவருக்கு ஆயுள் மற்றும் கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை
Published on

திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு அருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து அம்மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜ்குமார் என்ற முதியவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சிறுமியால் படிப்பை தொடர முடியாததால், ராஜ்குமாருடன் ஆடு மேய்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இந்நிலையில் சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து நடைபெற்று வந்த வழக்கில் ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com