சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு - தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் விடுதலை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்தியதாக ராஜ்குமார் உள்ளிட்டோர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் என்பவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், வன்கொடுமை வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், ஜெய்சங்கர் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com