Dindigul | ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி
ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி
#dindigul #thanthitv
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நிலக்கோட்டை சாலையில், அரசு அனுமதி இன்றி ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், அங்கு சிக்கிய மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த 2 பெண்களை மீட்டுப் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கிளினிக் உரிமையாளர் கோபிநாத் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள 3 பேரையும் வத்தலகுண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
