"கிணற்று நீரில் கலந்த சாயக்கழிவு - குடிக்க உகந்ததற்றதாக மாறிய நீர்"
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தேவாங்கபுரம் பகுதியில் கிணற்று நீர் முழுவதும் சாயக்கழிவு நீர் கலந்தது குறித்து ஆய்வு நடத்திய அதிகாரிகள் கிணற்று தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளனர். சாதாரணமாக குடிநீரானது வேதித்தன்மை 150 முதல் 200 வரை இருந்தால் மட்டுமே அதனை குடிக்க முடியும் என்ற நிலையில், இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரி குடிநீரில் வேதித்தன்மை 820 முதல் 850 வரை காணப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றிலும் சாயப்பட்டறைகள் ஏதும் இல்லாத நிலையில், சாயக்கழிவு நீர் கிணற்று நீரில் கலந்தது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Next Story
