வீடுகளை சுற்றி கழிவுநீர்... நோய் பரவும் அபாயம் - அச்சத்தில் மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஆயக்கொளத்தூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே கழிவுநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மற்றொரு புறம் செல்ல முடியாததால் சுகாதார சீர்கேடு உருவாகியிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com