ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் - நோயாளிகள் கடும் அவதி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் - நோயாளிகள் கடும் அவதி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கடும் துர்நாற்றம் வீசியதால், நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு முன்பாக, இன்று காலை அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. சடலத்தை மருத்துவமனை வாசலிலேயே இறக்கி வைத்துவிட்டுச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர், நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால் அந்த உடல் பிணவறைக்கு மாற்றப்படாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே கிடந்தது.

#ramanathapuram #ghhospital #smell #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com