வருண் IPS தொடந்த வழக்கில் சீமான் தரப்புக்கு பின்னடைவு - நீதிபதி முக்கிய அறிவிப்பு

x

சீமான் மீதான வருண் IPS தொடர்ந்த அவதூறு வழக்கு - விசாரணைக்கு உகந்தது என நீதிபதி அறிவிப்பு

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு, விசாரணைக்கு உகந்தது என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிபதி விஜயா அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண் குமார் இருந்தபோது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களிலும், சீமான் செய்தியாளர் சந்திப்புகளிலும் அவதூறாக பேசியதாகக் கூறி, வருண் குமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரணைக்கு ஏற்கலாம் என உத்தரவிட்ட நீதிபதி, ஜூலை 7-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்