தொடர் பைக் திருட்டு - காட்டிக்கொடுத்த சிசிடிவி - இரட்டை சகோதரர்கள் அதிரடி கைது
செய்யாறு பகுதியில் தொடர் இரு சக்கர வாகன திருட்டு நடந்த சம்பவத்தில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ராமன், லட்சுமணன் என்ற இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
Next Story