கோவை கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள் கொடுத்த பரபரப்பு புகார்
பள்ளியில் சாதி மற்றும் உடல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாக கோவை ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. க.க.சாவடி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் முருகன் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 100 விழுக்காடு தேர்ச்சி விகிதம் காட்ட, வேண்டுமென்றே சிலரை பள்ளிக்கு வரவிடாமல் செய்வதாக ஆசிரியர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் முருகன் கூறுகையில், அதே பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியர் காழ்ப்புணர்ச்சி காரணமாக குழந்தைகளை வைத்து இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை தன் மீது வைப்பதாக தெரிவித்துள்ளார்.
Next Story