தவெக தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்...
விஜய் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் மீது தவெக முன்னாள் உறுப்பினர் வைஷ்ணவி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் தவெக வில் பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியேறி திமுகவில் இணைந்தார். இதனால் தன்னை பற்றி தவெகவினர் அவதூறான கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதாகவும், அக்கட்சியின் தலைவர் விஜய் அவற்றை கண்டிக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டி புகார் மனு அளித்ததாக வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
Next Story
