Social Media | Fb | insta | Child | பேஸ்புக், இன்ஸ்டா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
பேஸ்புக், இன்ஸ்டா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
#facebook #instagram #childuse #europeunion #thanthitv ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப விதிகளை மீறியதாக மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் மீது அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இந்தச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க மெட்டா நிறுவனம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஐரோப்பாவில் சுமார் 10 முதல் 12 சதவீத சிறுவர்கள் இந்தத் தளங்களைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
