"கொலை மிரட்டல் விட்ட செங்கோட்டையன்.."-பதறி அடித்து ஓடிவந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்

x

கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் - புகார் செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில், குண்டு வீசி கொலை செய்வோம் என்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மிரட்டுகிறார்கள் என அதிமுக முன்னாள் கவுன்சிலர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் நிலவாரப்பட்டியை சேர்ந்த, அதிமுக முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, துரோகம் செய்யப்போகிறார் என விவாத்ததில் பேசியிருந்தார். இதனால், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பல எண்களில் இருந்து தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்