செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஏற்கனவே இருந்த காவல் நிலையம் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்ததால், 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வேறு இடத்தில் தற்போது புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.