1664 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நவீன செல்போன்கள் - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்

அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆன்ட்ராய்ட் செல்போன்களை வழங்கினார்.
1664 அங்கன்வாடி பணியாளர்களுக்கு நவீன செல்போன்கள் - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்
Published on

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சியில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆன்ட்ராய்ட் செல்போன்களை, வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் ராஜசேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், முதல்கட்டமாக ஆயிரத்து 664 பேருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, திட்டங்களை முனைப்பாக மக்களிடத்தில் கொண்டு செல்லக் கூடியவர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் என பாராட்டு தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com