மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல் : ஒருவர் கைது

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை, ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பல் : ஒருவர் கைது
Published on
மதுரையில் இருந்து புனலூர் செல்லும் பயணிகள் ரயிலில், ரகசிய தகவல் அடிப்படையில் பாறசாலை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞரிடம் சோதனை நடத்திய போது 2 பேர் தப்பியோடினர். இதனிடையே அந்த இளைஞர், அவரது உடலின் ரகசிய பகுதியில் பதுக்கி வைத்திருந்த நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த இளைஞர் கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அஜ்மல் என்பதும், தப்பி ஓடியவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த மாகின் மற்றும் தங்கு எனவும் தெரிய வந்துள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் 3 பேரும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அஜ்மலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com