புனரமைக்கப்பட்ட புதிய பதிவுத்துறை அலுவலகம் - திறந்து வைத்த அமைச்சர்கள் மூர்த்தி, சேகர்பாபு
சென்னை, பாரிஸ் கார்னரில் 9 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய பதிவுத்துறை அலுவலகங்களை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்... பதிவுத்துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான கட்டடம் 1864ஆம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டடக்கலை நயத்துடன் கட்டப்பட்டது. புனரமைக்கப்பட்ட கட்டடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்த நிலையில், இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஐயந்த், பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
