சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கதுறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த கமர் அலி என்பவர் 99 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 200 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதே போல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரியாஸ்கான், இப்ராகீம்ஷா ஆகியோர் 2 கோடியே 4 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 600 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.