செய்யூர் சசிகலா மரணம் தொடர்பான வழக்கு - சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

இளம்பெண் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
செய்யூர் சசிகலா மரணம் தொடர்பான வழக்கு - சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிக்கை
Published on

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார்குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் ஜூன் 24ம் தேதி உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சசிகலாவின் சகோதரர் அருண்பாபு போலீஸில் புகார் அளித்தார்.

மேலும், திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் இருவரும் சசிகலாவை கொலை செய்து விட்டு நாடகமாடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கிடையில், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக

இருவரும் நீக்கப்பட்டனர். புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், தேவேந்திரன் சரணடைந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது

தாய் சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com