நாதகவினருக்கு சீமான் வெளிப்படையான அழைப்பு

x

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வரும் 15ம் தேதி பனைமரம் ஏறி, கள் இறக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெரியதாழை, குலசேகரப்பட்டினத்தில் "கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்னிறுத்தி பனைமரம் ஏறி, கள் இறக்கும் உரிமை மீட்பு போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் தமிழர் கட்சியின் மாநில மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்களுடன், அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்