``பிரபாகரனை இழுத்துவிடும் முயற்சி வேண்டாம்’’ - சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு எதிர்ப்பு
தந்தை பெரியாரும், பிரபாகரனும் எதிர்த் துருவங்கள் அல்ல என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியாரையும், பிரபாகரனையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டியமைக்கும் பொய் பிம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளுக்குள் பிரபாகரனை இழுத்து விடும் முயற்சியை சீமான் உள்பட எந்த அரசியற்கட்சித் தலைவரும் மேற்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
