அரசு அலுவலக மின்விசிறியில் பாதுகாவலர் தூக்கிட்டு தற்கொலை
கரூர் மாவட்டம், மருதூர் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் குளித்தலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பாதுகாவலராக பணி செய்து வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு உதவி பொறியாளர் அலுவலக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
