இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...
Published on
ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சாகர் கவாச் என்ற பெயரில் நடக்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை தொடர்கிறது. இதற்காக கடலோர காவல்படையினர் , தமிழக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மாநில உளவு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடி பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் கப்பல் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com