ராமநாதபுரத்தில் 2 மாதங்கள் 144 தடை - பறந்த உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது... தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா உள்ளிட்ட நிகழ்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக அம்மாவட்டத்தில் அக்டோபர் 31 வரை 2 மாதங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது... குறிப்பாக 15ஆம் தேதி தேதி வரையிலும் மற்றும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது 

X

Thanthi TV
www.thanthitv.com